"நீர்ப்பாசனத்தின் மகிமை" வேலைத்திட்டம்: வவுனியா வடக்கில் 6 குளங்கள் புனரமைப்பு!

#SriLanka #Vavuniya #Project #Lanka4 #North #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
"நீர்ப்பாசனத்தின் மகிமை" வேலைத்திட்டம்: வவுனியா வடக்கில் 6 குளங்கள் புனரமைப்பு!

"நீர்ப்பாசனத்தின் மகிமை – எமது பாரம்பரியம்" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 06 குளங்களைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒன்றான நயினமடு குளத்தின் புனரமைப்புப் பணிகள் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன் மற்றும் எஸ். திலகநாதன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நயினமடு குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் 420 ஏக்கர் நெற்பயிர் செய்கை நிலங்கள் பாசன வசதியைப் பெறுவதுடன், சுமார் 120 விவசாயக் குடும்பங்கள் நேரடிப் பயன்பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் என். கமலதாசன், அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4